பாகிஸ்தான் அணியை 172 ஓட்டங்களுக்கு சுருட்டிய இருவர்! வெற்றிப்பாதையில் வங்காளதேசம்
வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 186 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சுருண்ட பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ஓட்டங்களும், வங்காளதேசம் 262 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் மஹ்முத், நஹித் ராணா ஆகிய இருவரின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 172 ஓட்டங்களுக்கு சுருண்டது.
186 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
அஃஹா சல்மான் ஆட்டமிழக்காமல் 47 (71) ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 43 (73) ஓட்டங்களும் எடுத்தனர். வங்காளதேசத்தின் தரப்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் வங்காளதேச அணிக்கு 186 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஜகிர் ஹசன் 31 (23) ஓட்டங்களுடனும், ஷாத்மான் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்காளதேசத்தின் கடைசி நாளில் 143 ஓட்டங்களே தேவைப்படுவதால், அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Outstanding bowling performance!?
— Bangladesh Cricket (@BCBtigers) September 2, 2024
Hasan Mahmud takes his first five-wicket haul in a test match against Pakistan in Rawalpindi! ???
PC: PCB#BCB #Cricket #BDCricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/v17FDAYLFd
Pakistan ? Bangladesh | 2nd Test
— Bangladesh Cricket (@BCBtigers) September 2, 2024
Stumps - Day 04 | Bangladesh need 143 runs.
PC: PCB#BCB #Cricket #BDCricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/V2Omq2Pfyt
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |