முடிவுக்கு வந்த மோதல்; மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கும் வங்கதேச வீரர்கள்
bangladesh players registered for 2027 ipl Mustafizur controversy: after பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே மோதல் நிலவி வந்த நிலையில், 2027 ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு வங்கதேச வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
2027 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்கள்
2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்குபெற விரும்பும் வீரர்கள் நவம்பர் 27 ஆம் திகதிக்கு முன்னதாக பெயரை பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வங்கதேச வீரர் முஸ்தாபிசூர் ரஹ்மானை (Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணி விடுவித்த பின்னர், பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) இடையே மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில், 2027 ஐபிஎல் ஏலத்திற்கு வங்கதேச வீரர்கள் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதோடு, வங்கதேச கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது.
முஸ்தாபிசூர் ரஹ்மான் உட்பட 7 வங்கதேச வீரர்கள் 2027 ஐபிஎல் ஏலத்திற்கு தங்களது பெயரை பதிவு செய்து வருவதாக India Today செய்தி வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ - பிசிபி மோதல்
கடந்த ஆண்டின் இறுதியில், வங்கதேசத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மினி ஏலத்தில் வாங்கியதற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, BCCI அறிவுறுத்தலின்படி ரூ.9.20 கோடிக்கு வாங்கப்பட்ட முஸ்தஃபிசுர் ரஹ்மானை KKR அணி விடுவித்தது.
இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானை போல் 2026 T20 உலக கிண்ணத்திற்கு வீரர்களை அனுப்ப மறுத்து, வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது.
அந்த கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்த நிலையில், 2026 T20 உலக கிண்ணத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என வங்கதேசம் அறிவித்தது.
இவ்வாறாக மோதல் நிலவி வந்த நிலையில், தற்போது இரு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவு சீராகி மீண்டும் வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் களம் காண உள்ளனர்.