மீண்டும் கேப்டனாக களமிறங்கும் மிரட்டல் வீரர்! ஆசியக் கோப்பைக்கு தயாரான வங்க புலிகள்
- ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஷகிப் அல் ஹசன் மீண்டும் வங்கதேச அணிக்கு கேப்டனாகியுள்ளார்
-
ஆசியக்கோப்பையை வெல்ல நம்பிக்கையுடன் இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்கத் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்
ஆசியக் கோப்பைக்கான 17 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்கதேச அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது.
தமிம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி இந்த தோல்விகளை சந்தித்ததால், ஆசியக்கோப்பைக்கு கேப்டனை மாற்றியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
அதன்படி தற்போது 17 வீரர்களை கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷகிப் அல் ஹசன் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
PC: Twitter
என்னதான் தொடரை இழந்தாலும் அந்த அணியில் குறிப்பிட்டத்தக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், அனாமுல் ஹக் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், மெகிதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், சோரிபுல் இஸ்லாம் ஆகியோர் பந்துவீச்சில் திறம்பட செயல்படுகின்றர்.
கடந்த 2012, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசியக்கோப்பை தொடர்களில் வங்கதேச அணி இறுதிப்போட்டி வரை வந்தது. எனவே இந்த ஆண்டு ஆசியக்கோப்பையில் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அணி விபரம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அனமுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், மக்மதுல்லா, மெகிதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், அபிஃப் ஹொசைன், மொசடெக் ஹொசைன், முஹம்மத் சைப்புதின், ஹசன் மஹ்முத், நசுன் அஹ்மத், சபிர் ரஹ்மான், மெஹிடி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் இமோன், நுருல் ஹசன், டஸ்கின் அகமது