விமான நிலையத்தில் சிக்கிய அவுஸ்திரேலியர்: விசாரணையில் அம்பலமான சதிச்செயல்
பயங்கவாத செயலை முன்னெடுக்க வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்ற அவுஸ்திரேலியர் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிட்னியை சேர்ந்த நவ்ரோஸ் அமின் என்பவரே, வங்காளதேசத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டு, தற்போது தண்டனை பெற்றவர்.
30 வயதான நவ்ரோஸ் அமின் கடந்த 2016ல் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது கைவசம் இருந்து ஐ.எஸ் ஆதரவு மாத இதழ்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான தரவுகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், வங்காளதேசத்தில் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து நவ்ரோஸ் அமின் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார் என கூறப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில், நவ்ரோஸ் அமின் வங்காளதேச நபர்கள் சிலருடன் குறியீடு வார்த்தைகளில் பேசிக்கொண்டதாகவும், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பில் கற்றுக்கொள்ள முயன்றதாகவும் அம்பலமானது.
மேலும், அவுஸ்திரேலியாவிலும் வங்காளதேசத்திலும் பயங்கரவாத தாக்குதலுக்கு நவ்ரோஸ் அமின் திட்டமிட்டதாக நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நவ்ரோஸ் அமின், தமது பெயருக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு பிணையில் வெளிவராதபடி நான்காண்டுகள் சிறை தண்டனையுடம் மொத்தம் 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைவாசம் அளிக்கப்பட்டுள்ளது.