வங்க தேசத்துக்கு எதிராக 2வது டெஸ்டில் விளையாடும் இலங்கை வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது! இளம் வீரருக்கு வாய்ப்பு
வங்க தேசத்துக்கு எதிராக 2வது டெஸ்டில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
ஏப்ரல் 21ம் திகதி Pallekele மைதானத்தில் தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 29ம் திகதி அதே Pallekele மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இலங்கை பிளேயிங் லெவன் விபரம்: திமுத் கருணாரத்ன (கேப்டன்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, பாத்தூம் நிசங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரமேஷ் மெண்டீஸ், சுரங்கா லக்மல், விஷ்வ பெர்னாண்டோ, பிரவின் ஜெயவிக்ரமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக ரமேஷ் மெண்டீஸ், பிரவின் ஜெயவிக்ரமா சேர்க்கப்பட்டுள்ளனர்.
Ramesh Mendis and Praveen Jayawickrama (Debut) comes IN for Lahiru Kumara and Wanindu Hasaranaga!#SLvBAN pic.twitter.com/rm1ncZeeWr
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 29, 2021
பிரவின் ஜெயவிக்ரமா தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் வெல்லும் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும், இதுவும் டிராவில் முடிந்தால் தொடரும் சமனில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.