உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மோதும் வங்கதேசம் VS இந்தியா: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா வீழ்த்துமா என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட்
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் 13 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
அப்போது லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அந்தவகையில் உலகக்கோப்பையில், இந்திய அணி வெற்றிகரமாக தனது ஆட்டத்தை தொடங்கி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் 2 -வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இன்று மோதல்
இந்நிலையில், இன்று நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணியின் போட்டி மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
இதுவரை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 40 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில், 31 முறை இந்தியாவும், 8 முறை வங்கதேசமும் வென்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டவில்லை.
இந்நிலையில், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |