மண்ணை கவ்விய வங்கதேசம்! அதிரடி காட்டிய இலங்கை வீரர்கள்: முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சதம் விளாசிய அசத்திய தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ்
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 68 ஓவர்கள் எதிர்கொண்டு 280 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
A captain's knock by Dhananjaya de Silva! ?? #BANvSL pic.twitter.com/TgXtc7h9mM
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 22, 2024
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா (102) மற்றும் கமிந்து மெண்டிஸ் (102) சதம் விளாசி அசத்தினர்.
வங்கதேச வீரர்கள் தடுமாற்றம்
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.
இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 51.3 ஓவர்கள் முடிவிலேயே 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
Dutch-Bangla Bank Bangladesh ? Sri Lanka Test Series 2024 | 1st Test
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2024
Day 02 | Lunch Break | Bangladesh trail by 148 runs
Details ? https://t.co/gxUy90qfPU#BCB #Cricket #BANvSL #BDCricket #LiveCrcket #Bangladesh #HomeSeries #testseries pic.twitter.com/s9ovonHNAf
மீண்டும் சதம் விளாசிய ஜோடி
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 36 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
Brilliant comeback to Test cricket for Kamindu Mendis, who smashes twin centuries (102 & 164) in Sylhet! ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 24, 2024
These are the FIRST EVER twin tons by a batsman batting at No. 7 or lower in Test history.
A truly remarkable feat! #BANvSL pic.twitter.com/my6sQm7waG
ஆனால் பின்னர் மீண்டும் ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
கேப்டன் தனஞ்சய டி சில்வா 179 பந்துகளில் 108 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 237 பந்துகளில் 164 ஓட்டங்களையும் குவித்து மீண்டும் சதம் விளாசி அசத்தினர்.
இதன் மூலம் இலங்கை அணி 510 ஓட்டங்கள் வங்கதேச அணியை விட முன்னிலை பெற்றது.
இலங்கை அபார வெற்றி
511 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 49.2 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
A thumping 328-run win seals a 1-0 lead in the 2-match Test series. #BANvSL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 25, 2024
Who were your standout performers in this match? pic.twitter.com/sMFsiuBIro
வங்கதேச அணியில் மொமினுல் ஹக் மட்டும் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் 87 ஓட்டங்கள் குவித்து போராடினார்.
ஆனால் இறுதியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |