வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 211 ஓட்டங்கள் இலங்கை முன்னிலை
இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 211 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்ட்
இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 68 ஓவர்கள் எதிர்கொண்டு 280 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
A magnificent maiden century from Kamindu Mendis takes the fight to Bangladesh! ? #BANvSL pic.twitter.com/naCu34eEMp
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 22, 2024
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா (102) மற்றும் கமிந்து மெண்டிஸ் (102) சதம் விளாசி அசத்தினர்.
தடுமாறிய வங்கதேசம்
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே தடுமாறியது, வங்கதேச அணியில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ஓட்டங்கள் குவித்தார்.
இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 51.3 ஓவர்கள் முடிவிலேயே 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
Dutch-Bangla Bank Bangladesh ? Sri Lanka Test Series 2024 | 1st Test
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2024
Day 02 | Lunch Break | Bangladesh trail by 148 runs
Details ? https://t.co/gxUy90qfPU#BCB #Cricket #BANvSL #BDCricket #LiveCrcket #Bangladesh #HomeSeries #testseries pic.twitter.com/s9ovonHNAf
இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் ராஜிதா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
முன்னிலையில் இலங்கை
இந்நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்ன மட்டும் 52 ஓட்டங்களை குவித்து ஷோரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 36 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் குவித்துள்ளது.
Dutch-Bangla Bank Bangladesh ? Sri Lanka Test Series 2024 | 1st Test
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2024
Stumps| Day 2 | Sri Lanka lead by 211 runs
Details ? https://t.co/gxUy90pI0m#BCB #Cricket #BANvSL #BDCricket #LiveCrcket #Bangladesh #HomeSeries #testseries pic.twitter.com/8apiJq2izi
அத்துடன் வங்கதேச அணியை விட 211ம் ஓட்டங்கள் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.
தற்போது இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா(23) மற்றும் விஷ்வா பெர்னாண்டோ(02) களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |