வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: 314 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை
வங்கதேச அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் இலங்கை அணி 314 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை-வங்கதேசம் 2வது டெஸ்ட்
இலங்கை-வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜாஹுர் அகமது சௌத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரான நிஷான் மதுஷ்கா 57 ஓட்டங்கள் குவித்தது இருந்த போது ரன்-அவுட் ஆனார்.
Captain's call!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 30, 2024
Our skipper DDS has won the toss and we'll be batting first! #BANvSL Let's get this underway! pic.twitter.com/f2z4Glkkg2
மற்றொரு தொடக்க வீரரான திமுத் கருணாரத்ன அதிரடியாக விளையாடி 129 பந்துகளில் 86 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
பின்னர் வந்த குசல் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி 150 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால் துர்திஷ்டவசமாக ஷாகிப் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தற்போது இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |