படுமோசமான தோல்வி! வாஷ் அவுட் செய்து பழி தீர்த்த வங்கதேசம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.
கயானாவில் நேற்று மேற்கிந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஷாய் ஹோப், பிரண்டன் கிங், ப்ரூக்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கார்ட்டி 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் பூரன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச பந்துவீச்சாளர் டைஜூல் இஸ்லாம் மேற்கிந்திய தீவுகளுக்கு சிம்மசொப்பணமாக விளங்கினார்.
அரைசதம் கடந்த பூரன் 73 ஓட்டங்களில் 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். ஷெப்பர்ட் தனது பங்குக்கு 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அந்த அணி 48.4 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. வங்கதேச அணி தரப்பில் டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
PC: Randy Brooks/AFP via Getty Images
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 49 ஓவர் வரை போராடி வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக லித்தன் தாஸ் 50 ஓட்டங்களும், கேப்டன் தமிம் இக்பால் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வங்கதேசம் வாஷ் அவுட் செய்தது. மேலும் டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த வங்கதேசம் அதற்கு பழி தீர்த்துக் கொண்டது.
PC: Getty Images