சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த இலங்கை: அதிர்ச்சி கொடுத்த வங்காளதேசம்
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்காளதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பதும் நிசங்கா 46 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி கொழும்பில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணியில் பதும் நிசங்கா நின்று விளையாட, குசால் மெண்டிஸ் (6), குசால் பெரேரா (0), சந்திமல் (4) மற்றும் அசலங்கா (3) ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
நிதானமாக ஆடிய பதும் நிசங்கா (Pathum Nissanka) 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கமிந்து மெண்டிஸ் 15 பந்துகளில் 21 ஓட்டங்கள் விளாச, தசுன் ஷானக (Dasun Shanaka) 25 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. மஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்காளதேச அணி வெற்றி
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 16.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தன்ஸித் ஹசன் தமிம் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 6 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மஹிதி ஹசன் (Mahedi Hasan) ஆட்டநாயகன் விருதும், லித்தன் தாஸ் (Litton Das) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
டெஸ்ட், ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி, டி20 தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |