கடைசி ஓவரில் திக் திக்..த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது.
டியோன் மையர்ஸ் 73 ஓட்டங்கள்
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புலவாயோவில் நடந்தது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. டியோன் மையர்ஸ் 73 (53) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 47 (38) ஓட்டங்களும் விளாசினர். சைஃப்புதின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன் தமிம் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.

தொடரை வென்ற வங்காளதேச அணி
கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட, பிராட் எவன்ஸ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அப்போது களமிறங்கிய மஹெதி ஹசன் பவுண்டரி அடிக்க, வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
58 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 66 ஓட்டங்கள் விளாசிய தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.
Bangladesh clinch the T20I series 2-1 against Zimbabwe with a fantastic team performance. A well-deserved series victory built on determination, teamwork, and resilience. pic.twitter.com/upWbYHCzvq
— Bangladesh Cricket (@BCBtigers) July 19, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |