விருந்தினருக்கு இலவச ஷாப்பிங்.., வளையல் மற்றும் சன்கிளாஸை வாரி வழங்கிய அம்பானி
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு வளையல் மற்றும் சன் கிளாஸ் இலவசமாக வழங்கப்பட்டது.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்துக்காக ரூ.5,000 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.
வளையல் மற்றும் சன் கிளாஸ்
அதோடு, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இலவசமாக ஷாப்பிங் செய்வதற்கு பிரத்யேகமான கடைகள் அமைக்கப்பட்டிருந்ததாக தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய-அமெரிக்க ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர் ஆகாஷ் சிங்குடன் யூடியூபரும் பாட்காஸ்ட் தொகுப்பாளருமான ரன்வீர் அல்லாபாடியா உரையாடியபோது தெரியவந்துள்ளது.
ஆகாஷ் சிங் கூறுகையில், "ஆனந்த் அம்பானியின் திருமணம் மற்றும் பிந்தைய திருமண விழாக்கள் அனைத்தும் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் தான் நடைபெற்றது.
இந்த இடத்தை கிரியேட்டிவ் டைரக்டர் மணீஷ் மல்ஹோத்ரா தான் பழங்கால வாரணாசி போல மாற்றினார். அங்கு நாங்கள் மாயாஜால உலகத்தில் இருப்பது போல தான் உணர்ந்தோம்.
அங்கு வரும் பெண் விருந்தினர்களுக்காக பிரத்யேகமான வளையல் கடைகளும், வெர்சேஸ் பிராண்ட் சன்கிளாஸ் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் விருந்தினர்களுக்கு இலவசம்.
அதோடு, தங்க நகைக்கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அதனை யாரும் இலவசமாக தரமாட்டார்கள்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |