கனேடியர்கள் சிலருடைய வங்கிக்கணக்கில் திடீரென செலுத்தப்பட்டுள்ள பணம்... வியப்பிலாழ்ந்த மக்கள்
சில கனேடிய மாகாணங்களில் வசிப்போரின் வங்கிக்கணக்கில் திடீரென ஒரு தொகை அதிகரித்திருக்கும் விடயம் மக்களை வியப்படையச் செய்துள்ளது.
ஆம், நேற்று, ஆல்பர்ட்டா, Saskatchewan, மனித்தோபா மற்றும் ஒன்ராறியோ ஆகிய மாகாணங்களில் வசிக்கும் மக்களுடைய வங்கிக்கணக்கில் 745 டொலர்கள் முதல் 1,079 டொலர்கள் வரை செலுத்தப்பட்டிருந்தது.
விடயம் என்னவென்றால், பெடரல் அரசு, தனது பருவநிலை நடவடிக்கை ஊக்கத்தொகையின் ஒரு தவணையை மக்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளது. ஆனால், அது ஆல்பர்ட்டா, Saskatchewan, மனித்தோபா மற்றும் ஒன்ராறியோ ஆகிய மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டும்தான்.
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு முதலான எரிபொருட்களைப் பயன்படுத்தும்போது அதற்கு ஒரு வரி விதிக்கப்படுகிறது. கார்பன் வரி திட்டம் என்னும் அரசின் இந்த திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் செலவைக் கொஞ்சம் குறைக்கும் நோக்கில்தான், மக்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற மாகாணங்களில் நேரடியாக மக்களுடைய வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுவதற்கு பதிலாக அது மாகாண அரசுகளிடம் கையளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு எவ்வளவு கிடைக்கும்?
இந்த ஆண்டு, பருவநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை நான்கு தவணைகளாக அளிக்கப்படும்.
குடும்பம் ஒன்றுக்கு அவர்கள் வாழும் மாகாணத்தைப் பொருத்து, கீழ்க்கண்ட தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
- ஆல்பர்ட்டா - 1,079 டொலர்கள்.
- Saskatchewan - 1,101 டொலர்கள்.
- மனித்தோபா - 832 டொலர்கள்
- ஒன்ராறியோ - 745 டொலர்கள்.
இதுபோக, சிறிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாழும் சமூகத்தினருக்கு 10 சதவிகித தொகை கூடுதலாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.