333 நாட்கள் FDக்கு வட்டி விகிதங்களை மாற்றிய பிரபல வங்கி.., எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
இந்த பிரபல வங்கியானது 333 நாட்கள் நிலையான வைப்புத்தொகைக்கு வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.
FD Rate Change
இந்தியாவின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியானது FD, RD, கடன் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில் KVB அதன் FDக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதன்படி புதிய விகிதங்கள் ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 4% முதல் 6.85% வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
மேலும், நியமனம், கடன் மற்றும் முன்கூட்டியே மூடல் போன்ற வசதிகளை வழங்குகிறது. குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 100 மற்றும் அதிகபட்ச தொகைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இருப்பினும், ஒருவர் ரூ. 3 கோடிக்கு மேல் முதலீடு செய்தால், அது மொத்த வைப்புத்தொகையாகக் கருதப்படும்.
444 நாட்கள் FD-ல் பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.85% என்றாலும், மூத்த குடிமக்களுக்கு வங்கி 7.25% வட்டி வழங்குகிறது. 333 நாட்கள் FD-ல் பொது குடிமக்களுக்கு 6.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டியும் கிடைக்கிறது.
இந்த வங்கியானது பசுமை வைப்புத் திட்டத்தில் 6.25 சதவீதம் வழங்குகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2345 நாட்களுக்கு முதலீடு செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |