பிரித்தானியாவில் 33 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி விகிதம் அதிகரிப்பு: எச்சரிக்கும் நிபுணர்கள்
வட்டிவிகிதம் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் பவுண்டு டாலருக்கு எதிராக 2% குறைந்து $1.11 என இருந்தது.
அப்படியான சூழல் ஏற்பட்டால் அது 1920 களுக்கு பின்னர் பிரித்தானியா நீண்ட கால மந்தநிலையை சந்திக்கக்கூடும்
பிரித்தானிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 33 ஆண்டுகள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தற்போதைய வட்டி விகிதம் 3% என எட்டியுள்ளது.
இதுவரை 2.25% என இருந்த வட்டி விகிதம் தற்போது 0.75 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2008க்கு பின்னர் இதுவே மிக அதிகமான வட்டி விகிதம் என கூறப்படு வந்த நிலையில், இன்றைய வட்டி விகித உயர்வு என்பது 1989க்கு பின்னர் மிக அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
@getty
இதனிடையே, வட்டிவிகிதம் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் பவுண்டு டாலருக்கு எதிராக 2% குறைந்து $1.11 என இருந்தது. மேலும், வட்டி விகிதம் 5% என்ற உச்சத்தை நெருங்கினால், பிரித்தானியா இரண்டு வருட பின்னடைவை சந்திக்கும் என்று வங்கி கணித்துள்ளது.
அப்படியான சூழல் ஏற்பட்டால் அது 1920 களுக்கு பின்னர் பிரித்தானியா நீண்ட கால மந்தநிலையை சந்திக்கக்கூடும் என்று வங்கி எச்சரித்துள்ளது. பொருளாதார மந்தநிலையானது இந்த ஆண்டின் இறுதியில் இருந்து 2024 இறுதி வரை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வட்டி விகிதம் அதிகரித்தவண்ணம் உள்ளது. வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், கடன் வாங்குவது குறையும் என்றும் மக்களின் செலவுகள் குறையும் என்றும் நம்பப்படுகிறது.
@getty
மேலும், வட்டி விகிதம் அதிகரிப்பதால் 1.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது அடமான கட்டணம் ஆண்டுக்கு சராசரியாக 880 பவுண்டுகள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க மத்திய வங்கியும் அதன் வட்டி விகிதத்தை, தொடர்ந்து 4ஆவது முறையாக அதிகரித்துள்ளது.
வட்டி விகிதம், 0.75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில் 15 ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் எனவும் கூறப்படுகின்றது.