இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் உயர்வு!
இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை 0.25% ஆக உயர்த்தியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக வட்டி விகிதத்தை இங்கிலாந்து வங்கி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாம்.
0.25% ஆக அதிகரிப்பதற்கு ஆதரவாக Monetary கொள்கை குழு 8-1 வாக்களித்துள்ளது.
கொரோனா வைரஸ் விளைவுகளுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்கள் 0.1% ஆகக் குறைக்கப்பட்டன.
தற்போது ஒமிக்ரான் மாறுபாடு பிரித்தானியா பொருளாதாரத்தை குறைக்கலாம் என்ற அச்சம் இருந்தபோதிலும் இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வங்கி அடிப்படை விகிதத்தை 0.25% ஆக அதிகரித்துள்ளதால், ஒரு tracker அடமான வாடிக்கையாளருக்கான வழக்கமான மாதாந்திர திருப்பிச் செலுத்துதலில் 15 பவுண்டுக்கு மேல் சேர்க்கப்படும்.
ஒரு standard variable rate அடமானம் வைத்திருப்பவர் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 பவுண்ட் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இந்த இரண்டு வகையான அடமான திட்டங்களில் ஒன்றைக் கொண்டுள்ளனர்.
ஒமிக்ரான் விளைவாக பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற உலகளாவிய சொத்துக்களின் விலைகள் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்தன, ஆனால் பின்னர் பெருமளவில் மீண்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது.