கடனாளியான தந்தை... மகன் கட்டியெழுப்பிய ரூ 2,000 கோடி நிறுவனம்: அறியப்படாத அம்பானி வாரிசு
ஒருகாலத்தில் முகேஷ் அம்பானியைவிடவும் பெரும் பணக்காரராக இருந்த அனில் அம்பானி, மொத்தமும் இழந்து கடனாளியான நிலையில், தற்போது அவரது மகன் இழந்த அனைத்தையும் மீட்டு வருகிறார்.
கடன்களில் இருந்து மீண்டு வருகிறார்
அம்பானியின் பிள்ளைகள் என்றாலே அனைவரும் முகேஷ் அம்பானியின் மகன்களான ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி மட்டுமே நினைவுக்கு வருவார்கள். ஆனால் சத்தமில்லாமல் சாதித்து வருவகிறார் இன்னொரு அம்பானி வாரிசான ஜெய் அன்மோல் அம்பானி.
அனில் அம்பானியின் மூத்த மகான அன்மோல் அம்பானியால் தான் தற்போது அனில் அம்பானி கடன்களில் இருந்து மீண்டு வருகிறார். உலகின் 6வது மிகப்பெரும் கோடீஸ்வரராக அறியப்பட்ட அனில் அம்பானி, ஒருகட்டத்தில் மொத்தமும் இழந்து கடனாளியானார்.
அன்மோல் அம்பானி தமது 18வது வயதில் Reliance Mutual Fund நிறுவனத்தில் பயிற்சியாளராக இணைந்தார். ஆனால் 2014ல் அதே நிறுவனத்தில் பொறுப்புக்கு வந்தார்.
ரிலையன்ஸ் குழுமத்தில் மிக விரைவில் வளர்ச்சியை பதிவு செய்த நிறுவனமாக ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் மாறியது. அவரது திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் செப்டம்பர் 2017ல் அன்மோல் ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
பொறுப்புகளை விரிவுபடுத்தினார்
அத்துடன் ஏப்ரல் 2018ல், ரிலையன்ஸ் நிப்பான் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் நிர்வாகக் குழுவில் சேர்ந்து தனது பொறுப்புகளை விரிவுபடுத்தினார். ரிலையன்ஸ் கேபிட்டலில் பணியாற்றும் போது அதன் பங்குகளின் மதிப்பானது 40 சதவிகிதம் வரை அதிகரித்தது.
இது அனில் அம்பானியின் சொத்து மதிப்பை உயர்த்தியது. தற்போது அன்மோல் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 20,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |