Fixed deposit முதலீட்டுக்கு அதிக Interest கொடுக்கும் வங்கிகள்! முழு விவரங்கள்
ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed deposit) முதலீட்டுக்கு அதிக வட்டி வழங்கும் 10 ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 4.50% முதல் 9% வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.5% முதல் 9.5% வரையும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank)
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 7 நாள்கள் முதல் 3650 நாள்கள் வரையிலான பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 3% முதல் 8.5% வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 3.75% முதல் 9.25% வரையும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
சூர்யோதாய் சிறு நிதி வங்கி
சூர்யோதாய் சிறு நிதி வங்கியானது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 4%-8.65% வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.5%-9.1% வரையும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது பொது வாடிக்கையாளர்களுக்கு 4%-8.50% வரையும், மூத்த குடிமக்களுக்கு 4.75%-9.1% வரையும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Shivalik Small Finance Bank)
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பொது வாடிக்கையாளர்களுக்கு 3.5%-8.55% வரையும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் 4%-9.05% வரையும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |