லண்டனின் புகழ்பெற்ற ஓவியம் திருடப்பட்ட சம்பவம்: கொள்ளையருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
பேங்க்ஸியின் புகழ்பெற்ற ஓவியத்தை திருடிய நபருக்கு 13 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட ஓவியம்
புகழ்பெற்ற தெரு ஓவியர் பேங்க்ஸி என்பவர் வரைந்த பெண் பலூனுடன்(Girl with balloon) இருக்கும் ஓவியம் திருடியதை ஒப்புக் கொண்டதையடுத்து குற்றவாளிக்கு 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 8ம் திகதி இரவு 11 மணியளவில் நடந்த கொள்ளை சம்பவத்தை கிழக்கு லண்டனின் பெக்டன் பகுதியை சேர்ந்த லாரி ஃப்ரேசர்(49) நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதையடுத்து வெள்ளிக்கிழமை அவருக்கான இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஓவியர் பேங்க்ஸியின் புகழ்பெற்ற படைப்பாக கருதப்படும் பெண் பலூனுடன் இருக்கும் ஓவியம் லண்டனின் நியூ கேவென்டிஷ் வீதியில் உள்ள க்ரோவ் கேலரியில் இருந்து திருடப்பட்டுள்ளது.

லாரி ஃப்ரேசர்(49) £270,000 மதிப்புள்ள ஓவியத்தை கேலரியின் கண்ணாடிகளை சுத்தியால் உடைத்து திருடிச் சென்றுள்ளார்.
அப்போது தன்னுடைய அடையாளங்களை மறைப்பதற்காக முகமூடி, தொப்பி மற்றும் கையுறைகள் ஆகியவற்றை அணிந்திருந்துள்ளார்.
இருப்பினும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் லாரி ஃப்ரேசரை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |