சுவிஸ் மக்கள் விரும்பி பயன்படுத்தும் சமூக ஊடகத்துக்கு தடை... இனி இராணுவத்தினர் இதைத்தான் பயன்படுத்தவேண்டுமாம்
சுவிஸ் மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் சமூக ஊடகம் வாட்ஸ் ஆப்!
ஆனால், சுவிஸ் இராணுவத்தினர், இனி வாட்ஸ் ஆப், சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.
அதாவது, இராணுவத்தினர் தங்களுக்கிடையே அதிகாரப்பூர்வ விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு இனி வாட்ஸ் ஆப், சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக ஊடகங்களுக்குப் பதிலாக, Swiss Threema என்னும் மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தக் கொள்கை மாற்றத்திற்கான முக்கிய காரணம் தரவு பாதுகாப்பு ஆகும் என இராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Threema என்னும் மென்பொருள் சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டதாகும்.
சுவிட்சர்லாந்தில் வாழும் 16 முதல் 64 வயதுடையோரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகம் வாட்ஸ் ஆப் என்பது குறிப்பிடத்தக்கது.