வெற்றி மகுடம் சூடிய இலங்கை வீராங்கனையின் கிளப் அணி! கிண்ணத்தை முத்தமிட்ட கேப்டன்
மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில், பார்படாஸ் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
மகளிர் கரீபியன் பிரீமியர் லீக்
மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட்டில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதிய மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் (Trinbago Knight Riders) அணி 8 விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் எடுத்தது.
How good is that for a wicket celebration? 😂
— Women’s CricZone (@WomensCricZone) August 30, 2024
(via @CPL) | #WCPL
pic.twitter.com/UpwuTuvXmj
ஷிகா பாண்டே 28 (31) ஓட்டங்களும், ஜென்னிலியா கிளாஸ்கோ 24 (31) ஓட்டங்களும் எடுத்தனர். ஆலியா அல்லெயனே 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சமரி அதப்பத்து அபாரம்
பின்னர் களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் (Barbados Royals) அணி 15 ஓவரிலேயே 6 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை வீராங்கனை சமரி அதப்பத்து ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணி மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை ஆலியாவும், தொடரின் சிறந்த வீராங்கனை விருதை ஹேலே மேத்யூஸும் பெற்றனர்.
The first time was so nice, they had to do it twice 🏆🏆
— Women’s CricZone (@WomensCricZone) August 30, 2024
The Royals from Barbados defend their crown! 👑#WCPL24 | #WCPL pic.twitter.com/hWuqdYqsCq
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |