ஜேர்மனியின் முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர் ராஜினாமா
Bärbel Bas has resigned as labor minister and as co-leader of the Social Democrats as tension grows with Chancellor Merz's CDU: பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியுடன் தொடர்ந்து மோதல்கள் உருவாகிவரும் நிலையில், SPD கட்சித் தலைவர்களில் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
பிரெட்ரிக் மெர்ஸின் முக்கிய கூட்டணிக்கட்சியான SPD கட்சியின் தலைவர்களில் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
கூட்டணிக் கட்சித் தலைவர் ராஜினாமா
சமீப காலமாக பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான ஆளும் Christian Democrat (CDU) கட்சிக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளில் ஒன்றான Social Democrats (SPD) கட்சிக்கும் இடையில் கொள்கை மோதல்கள் உருவாகியுள்ளன.
இந்நிலையில், SPD கட்சியின் இணைத்தலைவரும், நாடாளுமன்றத் தலைவர் உட்பட முக்கிய பொறுப்புகள் பல வகித்தவருமான, பார்பல் பாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2020இல் பாஸின் கணவர் மரணமடைந்த நிலையில், சமீபத்தில் அவரது மகளும் மரணமடைந்தார்.
ஆகவே, தனது துக்கத்திலிருந்து மீள்வதற்கு தனக்கு நேரம் தேவை என்று கூறியுள்ள பாஸ், அத்துடன், தனது SPD கட்சிக்கு வலிமையான தலைமை வேண்டும் என்றும் கூறி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஸ், மெர்ஸ் அரசில் தொழிலாளர் துறை அமைச்சராகவும் பணியாற்றிவந்த நிலையில், தனது அமைச்சர் பதவியையும், தனது கட்சித் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.