லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! கோடீஸ்வரனாக மாறும் தருணத்தில் ஏழை முடிதிருத்தும் தொழிலாளிக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் சம்பவம்
கேரளாவில் ஏழை நபருக்கு லொட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் தருணத்தில் அதை அனுபவிக்காமல் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
மலபள்ளிபுரத்தை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் சிறிதாக முடி திருத்தகம் ஒன்றை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடையை மூடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட காதர் வறுமையிலும் அந்த பழக்கத்தை தொடர்ந்து வந்தார்.
ஏனெனில் என்றாவது நமக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
இந்த நிலையில் அவர் வாங்கிய லொட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்தது. இதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என நினைத்த காதர் கனவில் கொரோனா இடியாக வந்து விழுந்தது.
அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காதர் உயிரிழந்துள்ளார். கோடீஸ்வரனாக வாழலாம் என்ற அவரின் கனவு கனவாகவே முடிந்துள்ளது.
உயிரிழந்த காதரின் சடலம் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவருக்கு சபியா என்ற மனைவியும், அஸ்கர் என்ற மகனும் உள்ளனர்.