பாயெர்ன் முனிச்சிற்கு மரண அடி கொடுத்த பார்சிலோனா! ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்
UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் பாயெர்ன் முனிச் அணியை வீழ்த்தியது.
Estadi Olimpic Lluis Companys மைதானத்தில் நடந்த போட்டியில் பார்சிலோனா (Barcelona) மற்றும் பாயெர்ன் முனிச் (Bayern Munich) அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே பார்சிலோனா வீரர் ராபின்ஹா கோல் அடித்து பாயெர்ன் முனிச்சிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
எனினும் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) பாயெர்ன் அணிக்காக 18வது நிமிடத்தில் மிரட்டலாக கிக் செய்து கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் 36வது நிமிடத்தில் Robert Lewandowski கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து ராபின்ஹா (Raphinha) 45வது நிமிடத்திலும், 56வது நிமிடத்திலும் என ஹாட்ரிக் கோல் அடித்தார்.
அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |