எல்ச்சே அணியை புரட்டியெடுத்த பார்சிலோனா: சம்பவம் செய்த இருவர்
Barcelona beat elche by 5-0 in la liga: லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை வீழ்த்தியது.
மானுவல் மார்ட்டினெஸ் வாலெரோ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில், பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை பந்தாடியது.
ரபின்ஹா
பார்சிலோனா மற்றும் எல்ச்சே அணிகளுக்கு இடையிலான லா லிகா கால்பந்து போட்டி மானுவல் மார்ட்டினெஸ் வாலெரோ மைதானத்தில் நடந்தது.
14வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் பார்சிலோனாவின் ரபின்ஹா (Raphinha) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து கரீம் அடேயேமி 45+3வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பார்சிலோனா, இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
அந்த அணியின் ஃபெர்மின் லோபெஸ் (Fermin Lopez) 71 மற்றும் 79வது நிமிடங்களில் கோல் அடித்தார்.
இதற்கு பதிலடியாக எல்ச்சே அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |