கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து: ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட முதன்மை நாடுகள் எடுத்த அதிரடி முடிவு
ஐரோப்பிய நாடுகளின் பல முக்கிய நகர மக்களுக்கு கால்பந்து என்பது மதமாக மாறிப்போயிருந்தாலும், கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் இந்த நகரங்களில் மொத்தமாக களையிழந்து காணப்படுகிறது.
மொத்தமாக ஸ்தம்பிக்கும்
பொதுவாக உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் என்றால் பார்சிலோனா, பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்கும். இந்த நகரங்களில் மொத்த மக்களும் தொலைக்காட்சி முன்பு சரணடைவார்கள்.
@ZUMA
மொத்த போட்டிகளையும் ஒரு திருவிழாவாக கொண்டாடிக் களிப்பார்கள். ஆனால் இந்தமுறை, கட்டார் கால்பந்து உலகக் கிண்ணம் மீது மக்களுக்கு ஆர்வம் ஏதுமில்லை என்றே கூறப்படுகிறது.
பதிலுக்கு, கட்டார் நிர்வாகத்திற்கு எதிராகவும், FIFA அமைப்புக்கு எதிராகவும் அமைதி ஊரவலங்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டார் நிர்வாகத்தின் மனித உரிமை மீறல்களே இந்த மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
@AP
மனித உரிமைகளையும் மதிக்காத
கட்டார் போன்ற அடிப்படை மனித உரிமைகளையும் மதிக்காத ஒரு நாட்டில் இதுபோன்ற ஒரு விழாவை முன்னெடுக்க வேண்டுமா என்ற கேள்வியை பார்சிலோனா, பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களில் மக்கள் முன்வைத்துள்ளனர்.
இதனால், ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நகரம், புகழ்பெற்ற பார்கா கிளப்பின் தாயகம், இந்த முறை பொதுமக்களுக்கு உலகக் கிண்ணம் போட்டிகளை ஒளிபரப்பவில்லை என கூறியுள்ளது.
@AP
மட்டுமின்றி, ஜேர்மனி மதுபான விடுதிகளில் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு பதிலாக திரைப்படங்களை திரையிட உள்ளனர்.
இதேப்போன்றே பாரிஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கால்பந்து உலகக் கிண்ணம் களையிழந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.