கிளீன் போல்டான ரூட், பட்லர்! இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கான் அணி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி 284
டெல்லியில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 284 ஓட்டங்கள் குவித்தது.
குர்பாஸ் 80 ஓட்டங்களும், இக்ரம் அலிக்கில் 58 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Twitter (@ACBofficials)
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே ஃபரூக்கி அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 2 ஓட்டங்களில் LBW முறையில் அவுட் ஆனார்.
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 15, 2023
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி
அடுத்ததாக ஜோ ரூட் 11 ஓட்டங்களில் முஜீப் ஓவரில் போல்டானார். அதன் பின்னர் தாவித் மலான் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 9 ஓட்டங்களில் நவீன் ஓவரில் கிளீன் போல்டானார்.
The President Strikes! ⚡@MohammadNabi007 has struck in his first over as he sends David Malan packing for 32 to give Afghanistan the 3rd wicket. ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 15, 2023
???????- 68/3 (12.4 overs)
?: ICC/Getty#AfghanAtalan | #CWC23 | #AFGvENG | #WarzaMaidanGata pic.twitter.com/63rRoSdLug
மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடும் லிவிங்ஸ்டனை 10 ஓட்டங்களில் ரஷீத் கான் வெளியேற்றினர். சாம் கரன் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நங்கூரமாய் நின்று ஆடிய ஹரி ப்ரூக் அரைசதம் அடித்தார். தற்போது வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களுடன் தடுமாறி வருகிறது.
Twitter (@ACBofficials)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |