இரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்
உடலில் இன்சுலின் உற்பத்தி குறைபாடு ஏற்படும்பொழுது இந்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவு, பானங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த பார்லி தண்ணீர் சர்க்கரை நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கு பார்லி தண்ணீர்
பார்லி நீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை இது குறைக்கிறது.
டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள் இந்த பார்லி நீர் குடிப்பதால், ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
பார்லியில் பயோ ஆக்டிவ் காம்பவுண்டுகள் இருப்பதால், இன்சுலின் உணர்திறனை இது அதிகப்படுத்துகிறது.
பார்லி தண்ணீரில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.உடல் எடை குறைக்க இந்த பார்லி தண்ணீரை தாராளமாக குடிக்கலாம்.
இந்த தண்ணீரை குடிப்பதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது, இதனால் உடலின் சர்க்கரை அளவு ஏரி இறங்காமல் அப்படியே இருக்கும்.
பார்லியில் டையூரிடிக் பண்புகள் உள்ளதால் உடலில் உள்ள நச்சுகள், கழிவுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கிறது.
மேலும் இது நமது உடலில் உள்ள அதிகப்படியான நீரை குறைத்து வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது.
பார்லி நீரில் குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து, நச்சுநீக்கும் பண்புகள் இருப்பதால் இது புத்துணர்ச்சி தரும் பானமாக இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |