பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்தும் மற்றொரு கிராமம்
Villagers to vote on 'leaving UK' over plans to house migrants near their village: தங்கள் கிராமத்துக்கு அருகே சுமார் 1,000 புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட இருப்பதை எதிர்த்து ஒரு கிராமத்தின் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளார்கள்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள பிடிங்டன் கிராம மக்கள், தங்கள் கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தினார்கள்.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் மற்றொரு கிராமம்
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள மற்றொரு கிராமமும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்த உள்ளது.

பார்னம் (Barnham) என்னும் அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில், அந்த கிராமத்தின் அருகே 931 புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுவருகிறது.
அவர்கள் அனைவரும் 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்கள்.
இதுவரை அமைதியாக இருந்த தங்கள் கிராமத்தின் அருகே சுமார் 1,000 புலம்பெயர்ந்தோர், அதுவும் ஆண்கள் நடமாடத் துவங்கினால், நிலைமையே மாறிவிடும் என்கிறார்கள் கிராம மக்கள்.

ஆகவே, தங்கள் கிராமத்தின் அருகே புலம்பெயர்ந்தோர் தங்கவைப்பதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று பார்னம் கிராம மக்கள், பிடிங்டன் கிராமத்தைப் போலவே வாக்கெடுப்பு நடத்த உள்ளார்கள்.
உள்துறை அலுவலகம் வழக்கம் போல, நடப்பதை கவனமாக கவனித்துவருவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.