பச்சிளம் குழந்தை மரணம்! மகளை இழந்த துக்கத்துக்கு மத்தியில் சதமடித்த வீரர்- நெகிழ்ந்து போன ரசிகர்கள்
இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பமான இந்தியாவின் ரஞ்சி கோப்பை போட்டியில், சிலநாட்களுக்கு முன்பு புதிதாய் பிறந்த மகளை இழந்த வீரர் விஷ்ணு சோலங்கி(29) சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் ரஞ்சி கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
இதில் பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவதற்காக கட்டாக்கில் தங்கியிருந்த விஷ்ணு சோலங்கி, அவருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக பிப்ரவரி 11ம் திகதி தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த குழந்தை 24 மணிநேரத்திலேயே இறந்துவிடவே பெங்காலுக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து வெளியேறி தனது மகளின் இறப்பு நிகழ்விற்கு விஷ்ணு சோலங்கி சென்றுள்ளார்.
What a player . Has to be the toughest player i have known. A big salute to vishnu and his family by no means this is easy? wish you many more hundreds and alot of success ?? pic.twitter.com/i6u7PXfY4g
— Sheldon Jackson (@ShelJackson27) February 25, 2022
இந்தநிலையில் மகள் இறந்த சில தினங்களிலேயே மீண்டும் பரோடா அணியின் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய விஷ்ணு சோலங்கி சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சண்டிகர் அணிக்கு எதிரான இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதியில் 387/7 என்ற ரன்களுடன் பரோடா அணி இருக்கவே, விஷ்ணு சோலங்கி 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.