சந்திரயான் -3 வெற்றியை பரோட்டா போட்டு கொண்டாடிய பரோட்டா மாஸ்டர்
உலகமே சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வரும் நேரத்தில் பரோட்டா போட்டு வித்தியாசமான முறையில் பரோட்டா மாஸ்டர் கொண்டாடியுள்ளார்.
சந்திரயான் - 3 வெற்றி கொண்டாட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
இதனை அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை கொண்டாடி வருகின்றனர்.
பரோட்டா மாஸ்டரின் கொண்டாட்டம்
தமிழக மாவட்டம், திருவாரூரில் உள்ள திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஒருவர் இஸ்ரோ மற்றும் ராக்கெட் வடிவத்தில் பரோட்டா போட்டு அசத்தியுள்ளார்.
அதாவது, ராக்கெட் மற்றும் 'ISRO 3' என்ற வடிவத்தில் பரோட்டா போட்டு தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |