பரோட்டா பிரியரா நீங்கள்? அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பரோட்டா அல்லது (புரோட்டா) பலருக்கு பிடித்த உணவு வகையில் முக்கியமான ஒன்று!
பரோட்டாவால் ஏற்படும் தீமைகள்
அந்தந்த ஊர்களுக்கு ஏற்றார் போல பல வகையான பரோட்டாக்கள் இருக்கிறது. பரோட்டாவை செய்ய பயன்படும் மைதா மாவானது., கோதுமையை அரைக்கும் சமயத்தில் வெளியாகும் தவிடு கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த பொருளானது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
vidyascooking
இரத்த அழுத்தம்
சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இள வயது உடல் பருமன் நிச்சயம்.
நாம் பரோட்டாவை உண்ணுவதால் எந்த விதமான நன்மையும் இல்லை. உடலுக்கு இரத்த அழுத்தத்தை மட்டும் அதிகரிக்க செய்கிறது.
எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடலுக்கு சோர்வை அதிகரிக்கும்.
onmanorama/Representational Image