கனடாவை நடுங்கவைத்த இலங்கையர் படுகொலை... வெளியான பின்னணி
கனடாவில் இலங்கையை சேர்ந்த தாயார் மற்றும் அவரது 4 பிள்ளைகள் உட்பட 6 பேர் கத்திக்குத்துக்கு பலியான சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரான ஆயுதத்தால் தாக்கிய நிலையில்
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு தொடர்புடைய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதில் ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யக (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகள், இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மிக சமீபத்தில் தான் இந்த குடும்பம் கனடாவிற்கு குடியேறியுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தர்ஷனியின் கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றே முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. கூரான ஆயுதத்தால் தாக்கிய நிலையில் 6 பேர்களும் காணப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 19 வயதான Febrio De-Zoysa என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த நபருக்கும் அந்த குடும்பத்திற்கும் தொடர்பில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரமான வன்முறை சம்பவம்
மேலும், Febrio De-Zoysa இலங்கையர் என்றும், கனடாவில் அவர் மாணவர் விசாவில் உள்ளார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கொல்லப்பட்ட தர்ஷனியின் குடியிருப்பிலேயே Febrio De-Zoysa தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சாந்தி ரமேஷ் என்ற அண்டை விட்டு நபர் தெரிவிக்கையில், சந்தேகம் ஏற்படும் வகையில் எந்த சத்தமும் தாம் கேட்கவில்லை என்றும், ஆனால் பொலிஸ் தரப்பும் மருத்துவ உதவிக்குழுவினரையும் தாம் காண நேர்ந்தது என்றார்.
நடந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், இது அதிர்ச்சி அளிக்கும் பயங்கரமான வன்முறை சம்பவம் என்றார். பொலிஸ் தரப்பு உரிய விசாரணை முன்னெடுப்பதுடன், உண்மையான பின்னணியை வெளிக்கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |