அவருக்கு சிலை வையுங்கள்! ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்..புகழ்ந்து தள்ளிய கேப்டன்
நெதர்லாந்து அணி வீரர் பஸ் டி லீடே சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை, அணியின் கேப்டன் ஸ்கொட் எட்வர்ட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.
நெதர்லாந்து உலகக்கோப்பைக்கு தகுதி
ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து அணி 277 ஓட்டங்கள் குவித்தது. பிரண்டன் மெக்முல்லன் 106 ஓட்டங்கள் விளாசினார். நெதர்லாந்தின் பஸ் டி லீடே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில், லீடே 92 பந்துகளில் 123 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஐந்து நபர் எனும் சாதனையை லீடே படைத்தார். அவரது சாதனையை அணியின் கேப்டன் ஸ்கொட் எட்வார்ட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Getty Images
பாராட்டித் தள்ளிய கேப்டன்
அவர் லீடே குறித்து கூறுகையில், 'அந்த நபருக்கு (லீடே) சிலை வையுங்கள். 120+ ஓட்டங்களுடன், ஐந்து விக்கெட்டுகள் என்பது நம்ப முடியாத ஆட்டம். ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமான உழைப்பு வேண்டும்.
அவர் ஒரு நம்ப முடியாத வீரர், நாங்கள் அதை எப்போதும் அறிந்திருக்கிறோம். எங்களுக்கு எதிராக வந்த அணிகளில் அனைவருக்கும் அது தெரியும். அவர் அதனை செய்வது முதல் முறை அல்ல, அதே சமயம் இது கடைசியாகவும் இருக்காது' என தெரிவித்தார்.
ICC (twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |