வயதின் அடிப்படையில் எவ்வளவு சேமிப்பு இருக்க வேண்டும்? வெளியான ஆய்வறிக்கை
அவுஸ்திரேலிய மக்களின் சேமிப்பு குறித்த நெருக்கடி வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. வெளியான ஆய்வறிக்கையில், உண்மையில் மக்கள் எவ்வளவு சேமித்துள்ளனர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது சாதனை உயர்வு
ஜூலை மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், சராசரி அவுதிரேலியர் ஒருவர் தற்போது 47,624 டொலர் தொகை சேமிப்பைக் கொண்டுள்ளார். 2019ல் இந்த ஆய்வுகள் தொடங்கப்பட்டதில் இருந்து இது சாதனை உயர்வு என்றே குறிப்பிடுகின்றனர்.
2023ல் இது 31,324 டொலர் என இருந்துள்ளது. இதில், Baby Boomers எனப்படும் 61 முதல் 79 வயதுடையவர்கள் சராசரியாக 65,428 டொலர் சேமிப்பைக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து Gen X எனப்படும் 45 முதல் 60 வயதுடையவர்கள் சராசரியாக 49,989 டொலர் சேமிப்பைக் கொண்டுள்ளனர். Millennials எனப்படும் 29 முதல் 44 வயதுடையவர்கள் சராசரியாக 42,337 டொலர் சேமித்துள்ளனர்.
அடுத்து Gen Z எனப்படும் 13 முதல் 28 வயதுடையோர் சராசரியாக 37,617 டொலர் சேமிப்பு வைத்துள்ளனர். இதற்கிடையில், இளம் அவுஸ்திரேலியர்கள் ஒவ்வொரு மாதமும் மிகவும் தீவிரமாகச் சேமித்து வருகின்றனர்.
மில்லினியல்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,286 டொலர் செலவிடுகிறார்கள். Gen Z மக்கள் மாதத்திற்கு 1161 டொலர் செலவிடுகின்றனர். ஆனால், Gen X மக்கள் சராசரியாக ஒரு மாதம் 807 டொலர் செலவிடுகின்றனர். Baby Boomers எனப்படுபவர்கள் மாதம் வெறும் 579 டொலர் மட்டுமே செலவிடுகின்றனர்.
நெருக்கடியான சந்தர்ப்பத்தில்
இருப்பினும், தனிப்பட்ட நிதி நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், 43 சதவீத அவுஸ்திரேலியர்கள் 1,000 டொலருக்கும் குறைவான சேமிப்பைக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு முதலீட்டு நிபுணர் தெரிவிக்கையில், பொதுவாக மக்கள் தங்கள் மாத சம்பளத்தில் 60 சதவீதத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். எஞ்சிய 40 சதவீதம் சேமிப்பு மற்றும் எதிர்காலத்தில் செலவுகளுக்காக பயன்படும் என்றார்.
அந்த 40 சதவீதத்தில், 10 சதவீதத்திற்கு குறைவாக ஷூ. மது உள்ளிட்டவகைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், இன்னொரு 10 சதவீதத்தில் விடுமுறை அல்லது நாய்க்குட்டி வாங்குவது போன்ற இலக்குகளுக்கு என சேமிக்க வேண்டும்.
எஞ்சிய 20 சதவீதத்தை சேமித்து, வாழ்க்கையின் பல கட்டத்தில் மிக நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மட்டுமின்றி, உங்கள் வங்கி அறிக்கைகளை சரிபார்த்து பயன்படுத்தப்படாத சந்தாக்களை ரத்து செய்யவும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், உங்கள் ஈகோ அனுமதிக்கும் என்றால் ஆடம்பர வாகனங்களின் பயன்பாட்டை தவிர்த்து விலை குறைவான காரை பயன்படுங்கள் என்றும் அவர் கூறுகிறார். மட்டுமின்றி, விலைவாசி உயர்வு ஏற்ற சம்பள உயர்வையும் கோருவதற்கு அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |