எந்த ஐரோப்பா நாட்டுக்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்... ஆனால்! பிச்சைகாரர்களுக்கு சுவிஸின் முக்கிய நகரம் வழங்கிய சலுகை
சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாஸல், பிச்சைகாரர்களுக்கு வழங்கியுள்ள சலுகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிச்சைகாரர்கள் ஐரோப்பாவில் உள்ள எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணிக்க பாஸல் நகரம் வவுச்சர் ஒன்றை வழங்கிறது.
ஆனால் அதற்கு ஈடாக நாங்கள் மீண்டும் சுவிஸிக்கு திரும்ப வரமாட்டோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதற்கு ஒப்புக்கொள்ளும் பிச்சைகாரர்களுக்கு, நகரின் குடிவரவு சேவை, ரயில் வவுச்சர்களையும், 20 சுவிஸ் பிராங்க் வழங்குகிறது.
இந்த வவுச்சரை பெற, குறிப்பிட்ட காலம் வரை சுவிஸிக்கு திரும்பி வரமாட்டேன் என பிச்சைகாரர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
அவர்கள் ஒப்பந்தத்தை மீறி வந்து பிடிப்பட்டால் நாடு கடத்தும் நிலை ஏற்படும்.
இதுவரை மொத்தம் 31 பேர் இந்த சலுகையை ஏற்றுள்ளனர். ருமேனியாவிலிருந்து 14, பெல்ஜியத்திலிருந்து 7, ஜேர்மனியிலிருந்து 7, இத்தாலியில் இருந்து 2 மற்றும் பிரான்சிலிருந்து 1.