புற்றுநோயால் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அஸ்மா அசாத்... அதிரவைக்கும் செய்தி
சிரியாவின் ஜனாதிபதியான பஷார் அல் அசாதின் மனைவிக்கு இரத்தப்புற்றுநோய் என அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அஸ்மா அசாத்...
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், சிரிய ஜனாதிபதியான பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அசாதின் மனைவியான அஸ்மா பிரித்தானியாவில் பிறந்தவராவார். ஆகவே, அவர் பிரித்தானியாவுக்குத் திரும்ப முயற்சிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகின.
ஆனால், சிரியாவில் கொடுமைகள் பல புரிந்த அசாதின் மனைவிக்கு பிரித்தானியாவில் தஞ்சமளிக்க கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், அசாதின் மனைவி அஸ்மா மரணத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அஸ்மாவுக்கு முன்னர் இரத்தப்புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், அவர் ஏற்கனவே மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, மீண்டும் அந்த இரத்தப் புற்றுநோய் பாதிப்பு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, அவர் உண்மையில் மரணத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், அஸ்மாவுக்கு மீண்டும் இரத்தப்புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு பாதிக்குப் பாதிதான் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, பிரித்தானியாவில் சிகிச்சை பெற அஸ்மா முயற்சி செய்துவருவதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், தனது கணவரான அசாதை விவாகரத்து செய்யவும் அஸ்மா முயற்சி மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |