சுவிட்சர்லாந்தில் இனி சுகாதார காப்பீட்டின் கீழ் இதுவும் அடங்கும்
அடிப்படை சுவிஸ் சுகாதார காப்பீட்டின் கீழ் இனி உளவியல் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் முதல், பயிற்சி பெற்ற உளவியலாளர்களால் வழங்கப்படும் உளவியல் சிகிச்சையானது (Psychotherapy) சுவிட்சர்லாந்தின் அடிப்படை கட்டாய சுகாதார காப்பீட்டின் கீழ் திருப்பிச் செலுத்தப்படும் என RTS தெரிவித்துள்ளது.
இந்த சேவைக்கு தகுதிபெற, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும் மற்றும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த சேவைக்கான விலைகள் அமைக்கப்படவில்லை.
மத்திய அரசும் மண்டலங்களும் திருப்பிச் செலுத்தக்கூடிய சேவைகளுக்கான விலையை இன்னும் தீர்மானிக்க வேண்டும். இதற்கிடையில், தற்காலிகமாக 31 டிசம்பர் 2024 வரை 154.80 சுவிஸ் ஃபிராங்குகள் விளையாக பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 185 பயணிகளுடன் பறந்த விமானம் நடுவானில் தீப்பிடிப்பு! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
மேலும், அமர்வுகளின் எண்ணிக்கையில் வரம்புகள் இருக்கும். ஒரு மருந்துச் சீட்டு 15 அமர்வு வரை அனுமதிக்கும், மேலும் 15 அமர்வுக்கு இரண்டாவது மருந்துச் சீட்டு தேவைப்படும். 30 அமர்வுகளுக்குப் பிறகு 40 அமர்வுகள் கொண்ட காப்பீட்டு நிறுவனத்தின் ஆலோசனை மருத்துவரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது, மனநல மருத்துவரால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மனநலப் பயிற்சியால் வழங்கப்படவில்லையெனில், உளவியல் சிகிச்சையானது திருப்பிச் செலுத்தப்படாது. உலக சுகாதார நிறுவனம் உலகளவில் மனநலம் குறித்த தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்ட நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.
இதையும் படிங்க: வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக லண்டனில் போராட்டம்
அறிக்கையின்படி, 2019-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள் மனநலக் கோளாறுடன் வாழ்கின்றனர். உலகளவில், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70% பேருக்கு எந்த மனநலப் பாதுகாப்பும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.
சுவிஸ் ஃபெடரல் கவுன்சிலின் கூற்றுப்படி, இந்த மாற்றம் 170 மில்லியன் ஃபிராங்குகளாக உயரும் வாய்ப்புடன் ஆண்டுக்கு 100 மில்லியன் CHF செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் செலவுகள் எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.