குளியலின் போது மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் இது போன்ற சிக்கல் ஏற்படுமாம்
குளியல் என்பது உங்கள் உடம்பில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமல்ல. உங்கள் உடம்பில் உள்ள உஷ்ணத்தையும் அது குறைக்கும்.
குளிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் நம் உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெகுநேரம் குளிப்பது
நீண்ட நேரம் குளித்தால் அது உங்கள் சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய்களையும் அகற்றிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? இவை இயற்கையான மாய்ஸ்சரைசர்களை அகற்றுவதால் உங்கள் சருமம் வறட்சியாகவோ, வெளிர் நிறமாகவோ மாறக்கூடும்.
myheatworks
வெந்நீர்
சூடான நீர் சருமத்திற்கு நல்லதல்ல. இது நம் உடலில் இரத்தத்தின் மேற்பரப்பில் விரைந்து சென்று வீக்கத்தைத் தூண்டும். மாறாக, வெதுவெதுப்பான நீரின் குளிப்பது சிறந்தது. அப்படியிருந்தும், நீங்கள் 10 நிமிடங்கள் மட்டுமே குளிக்க வேண்டும்.
சோப்பு
ஆர்கானிக் முறையில் தயாராகும் பாடி வாஷ் பிராண்ட்களை வாங்கி பயன்படுத்துவது சருமத்திற்கு மென்மையாகவும் இருக்கும், தீங்கும் விளைவிக்காது.
உடல் மற்றும் தலை முடியை துவட்டும் துண்டு
உங்கள் தலைமுடியை சுத்தம் செய்தவுடன், அதை உங்கள் துண்டை கொண்டு ஆக்ரோஷமாக அழுத்தி தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக, மென்மையான மைக்ரோ ஃபைபர் டவலைப் பயன்படுத்துங்கள். அவை உங்கள் கூந்தலில் இருந்து சரியான ஈரப்பதத்தை சேதப்படுத்தாமல் உறிஞ்சிவிடும்.
istockphoto