பேட்மேன் ஹீரோ நிமோனியாவால் உயிரிழப்பு - அதிர்ச்சியில் ஹாலிவுட்

Karthikraja
in பொழுதுபோக்குReport this article
பேட்மேன் ஹீரோ வால் கில்மர் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.
வால் கில்மர்
1984 ஆம் ஆண்டில் வெளியான 'டாப் சீக்ரெட்' என்னும் உளவு திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் வால் கில்மர்(Val Kilmer).
அதை தொடர்ந்து, ‘டாப் கன்’, ‘ரியல் ஜீனியஸ்’, ‘வில்லோ’, ’தி டோர்ஸ்’, ‘ஹீட்’, ‘தி செயிண்ட்’ போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து 90 களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
அதன் பின்னர், பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வால் கில்மர் பெரும் புகழ் பெற்றார்.
2015ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
அதன் பின்னர், Val என்ற பெயரில் தனது வாழ்க்கையை ஆவணப்படமாகத் தயாரித்து, அவரே கதை எழுதி நடித்திருந்தார்.
நிமோனியாவால் உயிரிழப்பு
கடைசியாக 2022 ஆம் ஆண்டு டாம் குரூஸ் நடிப்பில் வெளியான ‘Top Gun: Maverick’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், 65 வயதான வால் கில்மர், நிமோனியா என்னும் நுரையீரல் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 1988ஆம் ஆண்டு நடிகை ஜோன் வேலியை திருமணம் செய்த வால் கில்மர், 1996ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
வால் கில்மருக்கு மெர்சிடிஸ் என்ற மகளும், ஜாக் என்ற மகனும் உண்டு. தனது இறுதிக்காலத்தை குழந்தைகளுடன் கழித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |