படுசூப்பராக சிக்ஸர் அடித்த வீரர்! ஆனால் கடைசியில் அவருக்கே ஆப்பு வைத்த சுவாரசிய வீடியோ
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் துடுப்பாட்ட வீரர் சிக்ஸர் அடித்த போது, அவரது கார் கண்ணாடியே உடைந்து போன சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் யார்க்ஷயர் (Yorkshire) மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய ஆட்டத்தில், Illingworth St Mary’s cricket club அணியும், Sowerby St Peters CC அணியும் மோதின.
இதில் Illingworth St Mary’s cricket club வீரர் ஆஷிப் அலி பேட்டிங் செய்த போது, பந்து ஒன்றை சிக்சருக்கு விளாசினார்.
ஆனால் பந்து மைதானத்தை தாண்டிச் சென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆஷிப் அலியின் காரிலேயே விழுந்தது.
இதனால் அவரது கார் கண்ணாடி உடைந்துவிட, அப்படியே தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டார்.
இந்த வீடியோவை Illingworth St Mary’s cricket club தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.
That moment when you hit a massive six only for it crash through your own car windscreen ??
— Illingworth St Mary’s CC (@IllingworthCC) June 20, 2021
? Sound on to hear the smash ? pic.twitter.com/FNjRMic9U5