செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா? இதை செய்தால் போதும்
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துபவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது பேட்டரி பேக்கப் தான்.
செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness-ஐ அதிகமாக வைத்து பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge-ஐ சீக்கிரம் குறைவாக்கிவிடும். எனவே வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness Mode-ல் வைத்து விடுவது நல்லது.
போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது.
மொபைல் நிறுவனங்கள் தரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதை விட, வைபை இணைய வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது.
நம் மொபைல் போனில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான செயலிகள் , நாம் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக்கொண்டே இருக்கும், எனவே தேவையற்ற செயலிகளை uninstall செய்து விடுவது நல்லது.
உங்கள் போனில் சார்ஜ் குறையும்போது பேட்டரி சேவர் அல்லது லோ பேட்டரி மோட் சேவரைப் பயன்படுத்துங்கள்.
ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றை தேவையான பொழுது மட்டும் ஆன் செய்யலாம்.