ராஜினாமா செய்த பேட்டிங் பயிற்சியாளர் - ஆடிப்போன வங்கதேச கிரிக்கெட் அணி
வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கேதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த தொடர் நடக்கவுள்ள நிலையில் வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அஷ்வெல் பிரின்ஸ் செயல்பட்டு வந்தார்.
முன்னாள் வீரரான அஷ்வெல் பிரின்ஸூக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் குறுகிய கால ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு அணியில் அவருக்கு நிரந்தர பயிற்சியாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், அவரது ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரை இருந்தது.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அஷ்வெல் பிரின்ஸ் கூறியுள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால் ராஜினாமா செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.