மொத்த அணியும் சொதப்பல், தனியொருவனாக நின்று சதம் அடித்த கேப்டன்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாசினார்.
அவுஸ்திரேலியா மிரட்டல் பந்துவீச்சு
தென் ஆப்பிரிக்கா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Mangaung Oval மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தென்னாப்பிரிக்கா அணியை பந்தாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி: 0-3 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்
குவிண்டன் டி காக் 11 ஓட்டங்களிலும், வான் டெர் டசன் 8 ஓட்டங்களிலும் வெளியேறினர். அதன் பின்னர் களமிறங்கிய மார்க்ரம் (19), க்ளாஸென் (14) மற்றும் மில்லர் (0) ஆகிய அதிரடி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Twitter (@cricketcomau)
அரைசதம் விளாசிய கேப்டன்
இதனால் தென் ஆப்பிரிக்க அணி சரிவுக்குள்ளானது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய டெம்பா பவுமா நங்கூரம் போல் நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
அவருக்கு பக்க பலமாக நின்று ஆடிய ஜென்சென் 32 (40) ஓட்டங்களில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடிய பவுமா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 222 ஓட்டங்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டியது.
ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
@ProteasMenCSA (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |