அதனை மறக்க முயற்சிக்க மாட்டேன்! வலிக்க வேண்டும் - மோசமான தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன்
நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தோல்வியை மறக்க முயற்சிக்க மாட்டேன் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி தோல்வி
தரம்சாலாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போட்டி பரவலான பேச்சாக மாறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு பாராட்டுகளும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்தன.
AP
டெம்பா பவுமா கருத்து
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், 'நீங்கள் உணர்ச்சிகளை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். நடந்ததை மறக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அது வலிக்கும், அது வலிக்க வேண்டும். ஆனால், நீங்கள் நாளை திரும்பி வாருங்கள், நாங்கள் பயணத்திற்கு திரும்புவோம்.
எங்கள் பிரச்சாரம் முடிந்துவிடவில்லை. நீங்கள் இன்றைய (நேற்று) உணர்ச்சிகரமான நாளை உணர்ந்து, நாளை தலையை உயர்த்தி திரும்பி வர வேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்த செயல்பாட்டில் இருந்தோம். ஆனால், மீண்டும் வந்து அந்த செயல்திறனைப் பிரதியெடுப்பதே சவாலாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
ICC/Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |