பாயர்ன் முனிச் அதிர்ச்சி தோல்வி! ஆடுகளத்தில் தங்கள் குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய சார்ப்ருக்கென் வீரர்கள்
DFB-Pokal போட்டியில் பாயர்ன் முனிச் அணி 1 - 2 என்ற கோல் கணக்கில் சார்ப்ருக்கென் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
தாமஸ் முல்லர் கோல்
Ludwigsparkstadion மைதானத்தில் நடந்த ஜேர்மன் நாக்அவுட் கால்பந்து கோப்பை போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் சார்ப்ருக்கென் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் பாயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) அபாரமாக கோல் அடித்தார்.
Getty Images
அதற்கு பதிலடியாக சார்ப்ருக்கென் அணி வீரர் பேட்ரிக் (Patrick) 45+1 கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி பரபரப்பாக சென்றது.
கூடுதல் நேரத்தில் (90+6) மார்செல் காஸ் (Marces Gaus) ஒரு கோல் அடிக்க அதுவே சார்ப்ருக்கென் அணியின் வெற்றி கோலாக மாறியது.
Getty Images
சார்ப்ருக்கென் வீரர்கள் கொண்டாட்டம்
இறுதியில் சார்ப்ருக்கென் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியை வீழ்த்தியது. கடந்த போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்ற பாயர்ன் முனிச் அணியின் இந்த தோல்வியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், சார்ப்ருக்கென் வீரர்கள் நம்ப முடியாத இந்த வெற்றி களிப்பில் திளைத்தனர். அவர்கள் மட்டுமன்றி குடும்பத்தினரும் வெற்றியை கொண்டாடினர்.
சார்ப்ருக்கென் அணி வீரர்களின் குழந்தைகளும் ஆடுகளத்திற்குள் வரவே, அவர்களை கையில் ஏந்திக் கொண்டு வீரர்கள் ஆனந்த் கண்ணீர் வடித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Jean-Christophe Verhaegen/AFP/Getty Images
(Uwe Anspach/dpa via AP) (Uwe Anspach / Associated Press)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |