11வது முறையாக பன்டெஸ்லிகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பாயெர்ன் முனிச்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஜேர்மனின் கிளப் அணியான பாயெர்ன் முனிச் 11வது முறையாக பன்டெஸ்லிகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பன்டெஸ்லிகா இறுதிப்போட்டி
ஜேர்மனியின் RheinEnergieStadion மைதானத்தில் நடந்த பன்டெஸ்லிகா இறுதிப்போட்டியில், பாயெர்ன் முனிச் மற்றும் கோல்ன் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில், பாயெர்ன் முனிச் வீரர் கோமன் 8வது நிமிடத்திலேயே அபாரமாக கோல் அடித்தார். கோல்ன் பதில் கோல் அடிக்காததால் முதல் பாதியில் பாயெர்ன் முன்னிலை வகித்தது.
AFP
அதன் பின்னர் 81வது நிமிடத்தில் கோல்ன் அணியின் தேஜன் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
வெற்றி கோல்
அதனைத் தொடர்ந்து பாயெர்ன் இளம் வீரர் ஜமால் முசியலா 89வது நிமிடத்தில் மிரட்டலாக ஒரு கோல் அடித்தார். கோல்ன் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் பாயெர்ன் முனிச் வெற்றி பெற்றது.
இதன்மூலம் வியத்தகு முறையில் 11வது முறையாக பன்டெஸ்லிகா பட்டத்தைக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
Getty Images
பாயெர்ன் முனிச் சாம்பியன்
புள்ளிப்பட்டியலில் பாயெர்ன் முனிச் மற்றும் டார்ட்மண்ட் அணிகள் தலா 71 புள்ளிகள் சமநிலையில் இருந்தன. ஆனால் கோல் வித்தியாசத்தில் பாயெர்ன் முனிச் சாம்பியன் ஆனது.
பாயெர்ன் முனிச் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கோல் அடித்த இளம் வீரர் ஜமால் முசியாலா 'நம்ப முடியவில்லை, நன்றி' என மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
UNBELIEVABLE ??? pic.twitter.com/oy8sodQ0Fn
— Jamal Musiala (@JamalMusiala) May 27, 2023