PSGயின் தொடர் தோல்வி..ஜேர்மனி கிளப் அணியை சமாளிக்குமா? மெஸ்சிக்காக புதிய வியூகம்
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியை எதிர்கொள்வது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாயர்ன் முனிச் அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
சறுக்கும் PSG
ஜேர்மனியின் கிளப் அணியான பாயர்ன் முனிச் மற்றும் மெஸ்சியின் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் இன்று இரவு மோதுகின்றன.
PSG தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ள பாயர்ன் முனிச்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் போட்டி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாயர்ன் முனிச் அணியினர் கலந்து கொண்டனர்.
@Getty Images
பயிற்சியாளரின் பதில்
அப்போது நட்சத்திர வீரர் மெஸ்சியை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பாயர்ன் முனிச் பயிற்சியாளர் ஜூலியன் நகெல்ஸ்மன், 'ஒரு அணியாக மட்டுமே அதனை செய்ய முடியும். மெஸ்சி, நெய்மர் மற்றும் எம்பாப்பே ஆகியோரின் Passes-ஐ நாங்கள் தடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் நிறைய வேகத்துடன் Full-backs-ஐ பெற்றுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே அவர்கள் அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
@FCBayernEN(Twitter)