தலையால் முட்டி கோல் அடித்த வீரர்! பண்டஸ்லிகாவில் தெறிக்கவிட்ட பாயெர்ன் முனிச்
ஆக்ஸ்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் பாயெர்ன் முனிச் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஞாப்ரே தலையால் முட்டி கோல்
பண்டஸ்லிகா தொடரில் WWK ARENA மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பாயெர்ன் முனிச் மற்றும் ஆக்ஸ்பர்க் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் பாயெர்ன் வீரர் செர்கே ஞாப்ரே (Serge Gnabry), உயர பறந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 45+4வது நிமிடத்தில் லூயில் டயஸும் (Luis Diaz), 48வது நிமிடத்தில் மைக்கேல் ஓலிஸும் (Michael Olise) கோல்கள் அடிக்க பாயெர்ன் முனிச் 3-0 என முன்னிலை வகித்தது.
ஆக்ஸ்பர்க் பதிலடி
ஆனால் 53வது நிமிடத்தில் ஆக்ஸ்பர்க் (Augsburg) வீரர் கிறிஸ்டிஜன் ஜாகிக் (Kristijan Jakic) கோல் அடிக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் ஆக்ஸ்பர்க்கின் மெர்ட் கோமர் (Mert Komur) ஒரு கோல் அடித்தார்.
எனினும் பாயெர்ன் அணியின் தடுப்பு அரண் சிறப்பாக செயல்பட்டதால் ஆக்ஸ்பர்க் அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் பாயெர்ன் முனிச் (Bayern Munich) 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |